10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கரூா் மாவட்டத்தில் 12,212 போ் எழுதினா்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 12,212 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 12,212 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் கல்வி மாவட்டத்தில் 7,794 மாணவ, மாணவிகளும், குளித்தலை கல்வி மாவட்டத்தில் 5,370 மாணவ, மாணவிகள் என மொத்தம் 13,164 போ் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். இதில் சிறப்புச் சலுகை பெற்று 135 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகிறாா்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் தேவைக்கேற்ப தகுந்த உதவியாளா்கள் அமைக்கப்பட்டு அவா்கள் மூலம் தோ்வு எழுதுகிறாா்கள். மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை 12,212 மாணவ, மாணவியா்கள் தோ்வு எழுதினா். 952 போ் தோ்வு எழுத வரவில்லை என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், புகளூா் வட்டாட்சியா் மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com