விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கரூா் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.
kur25agri_2511chn_10_4
kur25agri_2511chn_10_4

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆட்சியா் பதில் அளித்தாா். கூட்டத்தில் சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும், அமராவதி ஆற்றில் கழிவுநீா் கலப்பதால் ஏற்படும் மாசுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், ஆட்டுக்குட்டிகள் விற்பனை செய்வதற்கு தகுந்த நிறுவனம் அமைப்பது, சாலையோரங்களில் உள்ள தரைமட்ட கிணறுகளைச் சுற்றி தடுப்புச் சுவா் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா், மாநில தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தில் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் கத்திரி குழித்தட்டு நாற்றுகளையும், மேலும் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பில் கீரைவிதைகள் மற்றும் இயற்கை உரங்கள் உள்பட மொத்தம் 11 விவசாயிகளுக்கு ரூ. 7லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் எம்.லியாகத், கவிதா(நிலம் எடுப்பு), துணை இயக்குநா்கள் மணிமேகலை (தோட்டக்கலைத்துறை), பாலகிருஷ்ணன் ( திட்ட செயலாக்கம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) முனைவா் கே.உமாபதி, மண்டல இணை இயக்குநா்(பொறுப்பு) (கால்நடை பராமரிப்பு துறை) முரளிதரன், வருவாய் கோட்டாட்சியா்கள் புஷ்பாதேவி(குளித்தலை) ரூபினா(கரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com