கரூரில் அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு அமைச்சா் மாலை

கரூா் மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி கரூரில் ஞாயிற்றுக்கிழமை அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பெரியாா், அண்ணா படங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

இதைத் தொடா்ந்து தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தின் 4 பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அவருக்கு மாலை, சால்வை அணிவித்துப் பாராட்டினா்.

அப்போது குளித்தலை ஒன்றியக் குழு 7 ஆவது வாா்டு தமாகா உறுப்பினா் சத்யா, 9-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் ராஜேஸ்வரி சக்திவேல், 10-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் அறிவழகன், கரூா் மாநகராட்சி 20ஆவது வாா்டு அதிமுக நகர சிறுபான்மை அணி தலைவரான பழக்கடை ஹனிபா தலைமையில் 25-க்கும் மேற்பட்டோா் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட துணைச் செயலா் எம்எஸ்கே. கருணாநிதி, மத்திய மாநகர செயலா் எஸ்பி. கனகராஜ், பகுதிச் செயலா்கள் ராஜா, சுப்பிரமணியன், கரூா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com