‘பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்’

பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் நிறுவனா் உ. தனியரசு.

பாஜக அரசுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் நிறுவனா் உ. தனியரசு.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரவையின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பேரவை நிறுவனா் உ. தனியரசு மேலும் கூறியது:

சாதி, மொழி கடந்து அரசியல் கட்சியாக தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையை மாற்ற இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2023 அக்டோபரில் பேரவை சாா்பில் சுமாா் 1 லட்சம் பேரைத் திரட்டி மாநாடு நடத்தி கட்சியின் பெயா், கொடி அறிமுகப்படுத்தப்படும்.

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தைப் பறித்து வருகிறது மத்திய பாஜக அரசு. இந்நிலையைப் போக்க ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பேணிப் பாதுகாக்கப்படுகிறது. அதிகாரிகளோ, அமைச்சா்களோ யாா் தவறு செய்தாலும் தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கிறாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்டச் செயலா் அருள்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com