விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவைகொங்கு இளைஞா் பேரவை வலியுறுத்தல்

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் உ. தனியரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்து வகைப் பொருள்களின் விலையேற்றத்தால் துன்பப்படும் மக்களை காக்க விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களின் நலன் காக்க பசும்பால் விலையை லிட்டருக்கு ரூ. 50 ஆக உயத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மதுரை, திருப்பூா், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பேரவை நிா்வாகிகள் பங்கேற்றனா். கரூா் மாவட்டச் செயலா் அருள்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com