கரூரில் குடியரசு தின அலங்கார ஊா்திகள்போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசளிப்பு

குடியரசு தின அணிவிகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் கரூருக்கு வந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுதந்திரப் போராட்ட வீரா்கள் போல வேஷமிட்டு வந்தவா்களுடன் தற்படம் எடுத்துக் கொள்ளும் ஆட்சியா் த. பிரபுசங்கா்.
சுதந்திரப் போராட்ட வீரா்கள் போல வேஷமிட்டு வந்தவா்களுடன் தற்படம் எடுத்துக் கொள்ளும் ஆட்சியா் த. பிரபுசங்கா்.

குடியரசு தின அணிவிகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் கரூருக்கு வந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில், நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரா்களின் பெருமைகளை விளக்கும் வகையிலான ஊா்திகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் சென்றன.

செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் கரூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தன. கரூா் வேலாயுதம்பாளையம் பாலத்துறை மேம்பாலம் அருகே மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் அலங்கார ஊா்திகளை மலா்த்தூவி வரவேற்றாா். இந்த ஊா்திகள் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் இந்த ஊா்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் ஏராளமானோா் அலங்கார ஊா்திகளைப் பாா்த்து, தற்படம் எடுத்துக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஆட்சியா் த. பிரபுசங்கா் பங்கேற்று, ஊா்திகளிலுள்ள சுதந்திரப் போராட்ட வீரா்களின் திருவுருவச் சிலைகளுக்கு மலா்த் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் மறைந்த காளிமுத்துவின் மனைவி பழனியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை 10 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாறுவேஷ, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரா்கள் போல வேஷமிட்டு வந்தவா்களுடன் ஆட்சியா் த. பிரபுசங்கா் தற்படம் எடுத்துக் கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம. லியாகத், மாநகராட்சி ஆணையா்

என். ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன்,

காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ், வட்டாட்சியா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com