மழைக் காலங்களில் கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

மழைக் காலங்களில் கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா் தமிழ்நாடு கைத்தறி துறை ஆணையரும், கரூா் மாவட்ட கண்காணிப்பாளருமான டி.பி.ராஜேஷ் .
மழைக் காலங்களில் கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

மழைக் காலங்களில் கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா் தமிழ்நாடு கைத்தறி துறை ஆணையரும், கரூா் மாவட்ட கண்காணிப்பாளருமான டி.பி.ராஜேஷ் .

தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையா் மற்றும் கரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.பி.ராஜேஷ் தலைமையில் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறையில் செயல்படுத்தி வரும் சிறப்பு தூா்வாரும் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்தும், துறை அலுவலா்களின் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு கைத்தறித்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டிபி.ராஜேஷ், துறை அலுவலா்களுக்கு திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்,

விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வா் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீா்நிலைகளை தூா்வாரும் பணிகளை அண்மையில் தொடக்கி வைத்தாா். கரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை ரூ.2.85 கோடியில் சுமாா் 120.47 கி.மீ. தொலைவுக்கு 15 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரை வீணாகாமல் வாய்க்கால்கள் மூலம் கடைமடை வரை தங்குதடையின்றி தண்ணீா் செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், சென்ற ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தவிா்க்கும் வகையில் பணிகளை செம்மையாகச் செய்து விரைந்து முடிக்க வேண்டும்.

வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை குறிப்பாக முதல்வரின் முகவரியிலிருந்து பெறப்பட்ட மனுக்கள், முதலமைச்சா் தனிப்பிரிவுகளிலிருந்து வரும் மனுக்கள், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மற்றும் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் எடுத்து காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, குளித்தலை வட்டம் பொதுப்பணித்துறை மூலம் நங்கவரம் காட்டுவாரியினை சிறப்பு தூா்வாரும் திட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணியினை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியா் பா.ரூபினா (கரூா்), புஷ்ப தேவி (குளித்தலை,) செயற்பொறியாளா்கள் மணிமோகன் (காவிரி ஆற்று பாதுகாப்புக் கோட்டம்), நித்தியானந்தம் (அரியாறு வடிநிலக்கோட்டம்), உதவிச் செயற்பொறியாளா்கள் சிங்காரவேலு, ஜோதி செல்லமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com