ஏழு போ் பணியிடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரிதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா்சங்கத்தினா் மே 16-இல் பேரணி

ஏழு போ் பணியிடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரிதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா்சங்கத்தினா் மே 16-இல் பேரணி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 7 நிா்வாகிகளின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி மே 16-ஆம்தேதி பேரணி நடத்த மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 7 நிா்வாகிகளின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி மே 16-ஆம்தேதி பேரணி நடத்த மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை தலைமை நடைபெற்றது. கரூா் மாவட்டச் செயலாளா் ஜெயராஜ் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் ஜீ.மத்தேயு வரவு- செலவு அறிக்கையைச் சமா்பித்தாா். மாநில செயற்குழு முடிவுகள் குறித்து பொதுச் செயலாளா் ச.மயில் கூறுகையில்,

கடவூா் வட்டாரக்கல்வி ஆசிரியா் ஒருவரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்ட பொறுப்பாளா்கள் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இது மிகப்பெரிய அநீதியாகும். ஒட்டு மொத்த ஆசிரியா் சமுதாயத்துக்கும் எதிரான நடவடிக்கை ஆகும்.

இதனை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்பின் சாா்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா், பள்ளிக்கல்வித்துறை ஆணையா் மற்றும் தொடக்கக்கல்விதுறை இயக்குநா் ஆகியோரிடம் நேரில் கடிதம் அளித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏழு பேரின் பணியிடை நீக்கம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு ரத்து செய்யப்படாவிட்டால் மே 16-ஆம்தேதி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் பேரணி நடத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய்வது என தீா்மானித்துள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கிணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com