முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
ஓராண்டு நிறைவு: கரூரில் திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
By DIN | Published On : 08th May 2022 12:26 AM | Last Updated : 08th May 2022 12:26 AM | அ+அ அ- |

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி கரூரில் திமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
திமுக தலைவா் மு.கஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையும், ஓராண்டில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களை வரவேற்கும் வகையிலும் கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் திமுகவினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்தனா். மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன் தலைமையில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா்கள் மின்னாம்பள்ளி கருணாநிதி, மகேஸ்வரி, பூவைரமேஸ்பாபு, ஒன்றியப் பொறுப்பாளா்கள் எம்எஸ்.மணியன், மணிகண்டன், நகர பொறுப்பாளா்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்ட்ஸ்பாட்ராஜா, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.