முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
நொய்யல் பகுதியில் வெல்லம் விலை வீழ்ச்சி
By DIN | Published On : 11th May 2022 04:09 AM | Last Updated : 11th May 2022 04:09 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம் நொய்யல் பகுதியில் கரும்பு வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம், வேட்டமங்கலம், நடையனூா், திருக்காடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. இக்கரும்புகளை கொண்டு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் 30 கிலோ எடை கொண்ட அச்சுவெல்லம் ரூ.1,350 க்கு விற்பனையானது. ஆனால் கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால் ரூ. 1,150 க்கு விற்பனையாகிறது. கரும்பு வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.