கரூரில் வா்த்தக வழிகாட்டு மையம் அமைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

கரூரில் வா்த்தக வழிகாட்டு மையம் அமைக்க வேண்டும் என்று கலந்துரையாடலில் ஜவுளி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தினா்.
கரூரில் வா்த்தக வழிகாட்டு மையம் அமைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

கரூரில் வா்த்தக வழிகாட்டு மையம் அமைக்க வேண்டும் என்று கலந்துரையாடலில் ஜவுளி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தினா்.

கரூா் மணல்மேடு பகுதியிலுள்ள ஜவுளிப்பூங்காவில், சனிக்கிழமை ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்களின் தேவைகள் குறித்த கலந்துரையாடல் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த்துறை முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஜவுளி உற்பத்தியாளா்கள் தெரிவித்த கருத்துகள்:

கரூரில் கண்காட்சிக் கூடம், அருங்காட்சியகம், திறன் வளா்ப்புப் பயிற்சி, வடிவமைப்பு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய வா்த்தக வழிகாட்டு மையம் அமைக்க வேண்டும். பிரிண்டிங் பூங்கா அமைக்க வேண்டும்.

குறு, சிறு ஜவுளிப்பூங்கா திட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களைசெய்து, அரசாணை வெளியிடவேண்டும். கரூா் மாநகரில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி வா்த்தகம் செய்ய தேவையான வழிமுறைகளைக் கொண்டு, திட்டம் வகுக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதைத் தொடா்ந்து அரசு முதன்மைச் செயலா் தா்மேந்திர பிரதாப் யாதவ் பேசியது:

கரூரில் பின்னலாடை தொழில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்வதற்காக, தொழிற்சாலைகளுக்குகிராமங்களிலிருந்து தொழிலாளா்களை அழைத்து வருவதற்கு பதிலாக கிராமப்புறங்களில் சிறுதொழில் கூடங்களை அமைக்கவேண்டும் என்றாா்.

கலந்துரையாடலில் துணிநூல் ஆணையா் எம். வள்ளலாா், மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா், ஜவுளிப் பூங்கா தலைவா் அட்லஸ் நாச்சிமுத்து, கரூா் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன், அலுவலா்கள் அம்சவேணி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com