அரவக்குறிச்சியில் பலத்த மழை
By DIN | Published On : 17th May 2022 04:12 AM | Last Updated : 17th May 2022 04:12 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது.
தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். வெயில் தாக்கத்தால் அவதியுற்ற மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியை அளித்துள்ளது.