ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில்விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டும்கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில், ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுறுத்தினாா்.
ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில்விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டும்கரூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில், ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுறுத்தினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது, கரூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், 2021-22ஆம் ஆண்டில் 46 பஞ்சாயத்துகள் தோ்வு செய்யப்பட்டன. இதில், சாகுபடி செய்யப்படாமல் 15 ஏக்கா் வரை தரிசாக உள்ள 80 தொகுப்பு நிலங்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தரிசு நில தொகுப்புகளில் ஒவ்வொன்றுக்கும் பயிா் சாகுபடித் திட்டத்தை தயாரித்து மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைப்புப் பணிகள் மூலம் அபிவிருத்தி செய்து, தரிசுநில தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் பங்கேற்று அவா்களின் வருமானத்தை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் உரிய செயல்திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். மேலும் சாகுபடி செய்ய வாய்ப்பு இல்லாத பகுதிகளை ஆராய்ந்து கால்நடை வளா்ப்பின் மூலம் வருமானத்தை உருவாக்கி, ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை விவசாயிகள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்வளம் குறைபாடு உள்ள நிலங்களை கண்டறிந்து, அவற்றில் சவுக்கு சாகுபடி செய்வது குறித்தும், ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களின் பயிா் சாகுபடிக்கு ஏற்றப்பகுதிகளாக இருந்து மானாவாரியாக உள்ள நிலங்களை நேரில் கள ஆய்வு செய்து, ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநா் மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) முனைவா் உமாபதி, வேளாண்மைத் துறை செயற்பொறியாளா் சுப்ரமணியன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com