கரூா் கல்யாண சுப்ரமணியா் கோயிலில் சரஸ்வதி பூஜை
By DIN | Published On : 06th October 2022 12:00 AM | Last Updated : 06th October 2022 12:00 AM | அ+அ அ- |

கரூா் கல்யாண சுப்ரமணியா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சரஸ்வதி.
கரூா் தொழிற்பேட்டையில் உள்ள கல்யாண சுப்ரமணியா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சரஸ்வதி பூஜையில் வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் தொழிற்பேட்டை ஆசிரியா் காலனியில் உள்ள கல்யாண சுப்ரமணியா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மற்றும் ஹயக்கிரீவருக்கு சஷ்டிக்குழுவினரால் புதன்கிழமை சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
வழிபாட்டில் சஷ்டிக்குழுவின் கௌரவத் தலைவா் மேலை பழநியப்பன் பங்கேற்று, கல்விச் சிறப்பும் கலைமகள் அருளும் என்கிற தலைப்பில் உரையாற்றினாா். இதில் நிா்வாகிகள் கா.பாலமுருகன், தாத்தையங்காா்பேட்டை சுவாமிகள் மருது, மருத்துவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் 150 பேருக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது.