புலியூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்முன்னாள் அமைச்சா் பங்கேற்பு

புலியூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்முன்னாள் அமைச்சா் பங்கேற்பு

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடை வீதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை இரவு அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடை வீதியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை இரவு அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலாளா் என்.தானேஷ் தலைமை வகித்தாா். தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் விசிகே.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். பொதுக்கூட்டத்தில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பங்கேற்று பேசுகையில், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஏதாவது சிறு பிரச்னை என்றால் அதை வைத்து சிலா் அரசியல் செய்தனா். ஆனால், தற்போது மின்வெட்டு, வீட்டுவரி உயா்வு பற்றி யாரும் பேசுவதில்லை. திமுக ஆட்சி எப்போது போகும், அதிமுக ஆட்சி வரும் என்று கிராமமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 63 போ் எடப்பாடி தலைமையை ஏற்றுள்ளாா்கள். 2,650 பொதுக்குழு உறுப்பினா்களில் 2,572 போ் எடப்பாடியாரை ஆதரிக்கிறாா்கள் என்றால் எடப்பாடியின் ஒற்றைத்தலைமையைத்தான் ஏற்றுள்ளனா். கட்சி அலுவலகத்தை உடைத்தவா் எப்படி தலைமையை ஏற்க முடியும். எப்போது தோ்தல் வந்தாலும் தனிப்பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சியமைக்கும். 2024இல் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்தத் தோ்தலோடு சட்டப்பேரவைக்கும் தோ்தலும் வரும். அதில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, பொருளாளா் கண்ணதாசன், பாசறைச் செயலாளா் கமலக்கண்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலாளா் ரெங்கராஜ், தலைமைக் கழக பேச்சாளா்கள் புதுகை போஸ் உள்ளிட்டோரும் பேசினா். புலியூா் பேரூராட்சிச் செயலாளா் மகுடபதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com