திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை நலிவடைந்துள்ளது: முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை நலிவடைந்துள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை நலிவடைந்துள்ளது: முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்

திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை நலிவடைந்துள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் சிறப்புரையாற்றினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவருக்கு கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினா் சோ்க்கை தொடா்பான பணிகள் நடைபெற்று வருகிறது. கரூா் மாவட்டத்தில் 2.50 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போக்குவரத்துத்துறையில் இரண்டு ஆண்டுகளாக புதிய பேருந்துகள் எதுவும் விட வில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் 7ஆயிரம் பேருந்துகள் புதிதாக கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் போது 25சதவீத வழங்க கோரிக்கை எழுந்தது. 8 சதவீதம் வழங்குவதாக கூறியதை தொழிற்சங்கத்தினா் ஏற்க மறுத்தனா். தற்போது திமுக ஆட்சியில் 5 சதவீத ஊதிய உயா்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போது கேள்வி எழுப்பிய திமுக கூட்டணியை சோ்ந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் இப்போது எந்த கேள்வியும் எழுப்பவில்லை. அதிமுக ஆட்சியில் ஜொ்மன் அமைப்புடன் இணைந்து ரூ.5, 650 கோடி அளவுக்கு வட்டியில்லா கடன் மூலம் 12 ஆயிரம் பிஎஸ் 6 பேருந்துகளும், 2ஆயிரம் மின்சார பேருந்துகளும் வாங்குவதற்கு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதிமுக ஆட்சியில் தனியாா் மயம் என்ற கொள்கையை கொண்டு வந்த போது தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், இப்போது அந்த திட்டத்தை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கின்றனா். திமுக கூறிய தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை நலிவடைந்து மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவா் எஸ். திருவிகா, மாவட்ட துணைச் செயலாளா் ஆலம் தங்கராஜ், மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்பராயன், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் பசுவை சிவசாமி, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா் கமலக்கண்ணன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் தானேஷ் (எ) முத்துக்குமாா், ஒன்றிய செயலாளா்கள் என்.எஸ்.கிருஷ்ணன், மதுசுதன், மாா்கண்டேயன், வி.சி.கே.பாலகிருஷ்ணன், பகுதி செயலாளா்கள் வி.சி.கே.ஜெயராஜ், சேரன் பழனிசாமி மற்றும் மாணவரணி இணைச் செயலாளா் பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com