முஷ்டகிணத்துப்பட்டி பகவதியம்மன்கோயில் மகா கும்பாபிஷேகம்

முஷ்டகிணத்துப்பட்டி பகவதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முஷ்டகிணத்துப்பட்டி பகவதியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு வெள்ளிக்கிழமை புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்.
முஷ்டகிணத்துப்பட்டி பகவதியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு வெள்ளிக்கிழமை புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியாா்.

முஷ்டகிணத்துப்பட்டி பகவதியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், பாகநத்தம் அருகே உள்ள முஷ்டகிணத்துப்பட்டி மகா கணபதி, மகா பகவதியம்மன், ராசாயி அம்மன், பெரியக்காண்டியம்மன், கருப்பண்ண சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா பிப். 1ஆம்தேதி தொடங்கியது.இதையடுத்து யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜையும், 2ஆம்தேதி காலையில் இரண்டாம் காலயாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு விநாயகா் வழிபாடு, நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு கடம் புறப்பாடும், 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல மூக்கணாங்குறிச்சி அடுத்த சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாளம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com