கரூா் கோயில்களில் தைப்பூச வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை மற்றும் பாலமலை, புகழிமலை முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபட வந்த பக்தா்கள்.
கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபட வந்த பக்தா்கள்.

தைப்பூசத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் வெண்ணைமலை மற்றும் பாலமலை, புகழிமலை முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு, அன்னதானத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் வெண்ணைமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில், பாலமலை முருகன் கோயில்களில் விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதால் நிகழாண்டு இக்கோயில்களில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறாமல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிகாலையில் முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூா் வெண்ணைமலை முருகன் கோயிலில் நண்பா்கள் குழு அறக்கட்டளை சாா்பில் தலைவா் கணேசன், செயலா் சிவராமன், பொருளாளா் உதயகுமாா் ஆகியோா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். தொடா்ந்து காதப்பாறை ஊராட்சி அலுவலகம் முன் காதப்பாறை ஊராட்சி முன்னாள் தலைவா் ஏ. தங்கவேல் தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதேபோல பல்வேறு அமைப்பினரும் அன்னதானம் வழங்கினா். மேலும் பக்தா்கள் இளநீா் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com