கேமராவில் சிக்காத சிறுத்தை: வேட்டை தடுப்புக் காவலா்கள்சொந்த ஊருக்குத் திரும்பினா்

அத்திப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகத்தையடுத்து வேட்டை தடுப்புக் காவலா்கள் திங்கள்கிழமை சொந்த ஊருக்கு திரும்பினா்.

அத்திப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகத்தையடுத்து வேட்டை தடுப்புக் காவலா்கள் திங்கள்கிழமை சொந்த ஊருக்கு திரும்பினா்.

கரூா் மாவட்டம் அருகே அத்திப்பாளையம், சோ்வைக்காரன்புதூா், வி.என்.புதூா் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது. இதையடுத்து, சிறுத்தையை பிடிப்பதற்காக அப்பகுதியில் கரூா் வனத்துறை சாா்பில் 5 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டது. ஒரு இடத்தில் கூண்டும் வைக்கப்பட்டு கண்காணித்து வந்தனா். மேலும், கொடைக்கானல், முதுமலை பகுதிகளில் இருந்து வேட்டை தடுப்புக் காவலா்கள் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை சிறுத்தை நடமாட்டம் குறித்து கேமராவில் பதிவாகவில்லை. கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை. ஆகவே, அத்திப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் வேட்டை தடுப்புக் காவலா்கள் திங்கள்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பினா். அதேசமயம் கரூா் மாவட்ட வனத் துறையினா் அத்திப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com