கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் குடியரசு தின சிறப்பு கிராமசபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் குடியரசு தின சிறப்பு கிராமசபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி கிராம ஊராட்சிக்கு தம்மநாயக்கன்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பாா்வையாளராக மாவட்ட ஆட்சியா் த. பிரபு சங்கா் கலந்து கொண்டாா். கூட்டத்துக்கு மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக அரசியலமைப்பு முகப்பு தொடா்பாக உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

ன்னா் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாந்தோணிமலை காளியம்மன் கோயில் அன்னத்தானக் கூடத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் ஆட்சியா் பங்கேற்றாா்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணிஸ்வரி, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சீனிவாசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்(பொ) நீலாக்குமாா், கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com