அரவக்குறிச்சி அருகே விழிப்புணா்வு பேரணி

அரவக்குறிச்சி அருகே கல்வி அளித்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே கல்வி அளித்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கொ.சீத்தப்பட்டி பகுதியில் அரவக்குறிச்சி, வட்டார வள மையம் சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவா்களுக்கு கல்வி அளித்தல் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை கொ.சீத்தப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பொன்ராஜ் தொடங்கி வைத்தாா்.

பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ப.சண்முகசுந்தரம், கொ.சீத்தப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் பொற்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய பாரத எழுத்தறிவு இயக்க திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளா் லதா, ஆசிரியா் பயிற்றுநா் தீபா , ஆசிரியைகள் மற்றும் மாணவா்கள் பேரணியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com