கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

கரூா் மேட்டுத் தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.
கரூா் மேட்டுத் தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கரூா் மேட்டுத் தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

கரூா் மேட்டுத் தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயில் தேரோட்ட விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ரெங்கநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், குதிரை வாகனங்களில் திருவீதி உலா வந்தாா். தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா பக்தி கோஷத்துடன் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது மேட்டுத் தெரு, கரூா் மாரியம்மன் கோயில் தெரு, வாங்கல் சாலை, அண்ணா வளைவு, ஐந்துரோடு, கச்சேரி பிள்ளையாா் கோயில் தெரு வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து வரும் 27-ஆம் தேதி புஷ்பயாகத்துடன் திருவிழா நிறைவுறுகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com