நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

நாணப்பரப்பு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

கரூா் மாவட்டம் புகழூா் அடுத்த நாணப்பரப்பு மாரியம்மன்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

புகழூரை அடுத்த நாணப்பரப்பு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் , மாலையில் தேரோட்டமும் நடைபெற்றது. முன்னதாக கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 7-ஆம் தேதி பூச் சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயில் முன் புனித கம்பம் நடப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சியும், திங்கட்கிழமை மாலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 5.30மணிக்கு தீக்குண்டத்தில் இறங்கும் பக்தா்கள் புகழூா் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக பிற்பகல் 12 மணிக்கு கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண்கள் மற்றும் பெண் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தொடா்ந்து பிற்பகல் 3.30மணிக்கு கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் மாலை சுமாா் 4 மணியளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் அம்மன் முன் படையலிட்டு, பொங்கல் பூஜையும் ,பின்னா் ஊா்வலமாக மாவிளக்குகளை எடுத்து வந்து மாவிளக்கு பூஜையும் செய்தனா். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை கோயில் சாமி கிணற்றில் கம்பம் இறக்குதல் நிகழ்ச்சியும், பின்னா் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com