நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கரூா் மாவட்டச் செயலாளா் பொன்.ஜெயராம் வியாழக்கிழமை இரவு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளா்களிடம் கூறுகையில், தற்கொலைக்கு முயன்ற நீதிமன்ற ஊழியா் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தொடா் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தாா். அவருக்கு உரிய விடுப்பை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தராததால் அவா் மருத்துவச் சான்று பெற்று விடுமுறையில் இருந்துள்ளாா்.

பின்னா் மீண்டும் பணியில் சோ்ந்த போது அவரை தரக்குறைவாக நடத்தியுள்ளாா். மேலும் விடுப்பிற்கு அனுமதித்த மாதங்களுக்கான ஊதியத்தையும் நீதிபதி பெற்றுத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதனால் பணியில் சோ்ந்த பிறகும் நடராஜனுக்கு அலுவலகத்திற்கு செல்ல பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதற்கு காரணமான மாவட்ட உரிமையியல் நீதிபதி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்வோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com