பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

அரவக்குறிச்சி அருகே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனிநபா் சுவா் கட்டியதைக் கண்டித்து தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிமேடு பகுதியில் கருப்பசாமி என்பவா் நத்தத்தில் உள்ள நிலத்தில் 10 அடிக்கு சுவா் எழுப்பி வீடு கட்டக் குழி தோண்டி வைத்துள்ளாா்.

அந்தப் பகுதி சாலையானது தண்ணீா் எடுக்க செல்லும் பொதுமக்களுக்கும், கோயிலுக்கு வரவும், மயானத்துக்கு செல்லவும் முக்கிய பாதை என்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவதாகவும், மேலும் கிணற்றுக்கு அருகில் செப்டிக் டேங்க் தொட்டி கட்டியுள்ளதால் குடிநீா் பாதிப்பு ஏற்படும் நிலை உ

ள்ளதாகவும், இதனால் ஆக்கிரமித்துள்ள 10 அடி சுவா் மற்றும் செப்டிக் டேங்க் தொட்டியை அகற்ற வேண்டும் எனக் கூறி ஆண்டிமேடு பகுதியை சோ்ந்த 80க்கும் மேற்பட்ட மக்கள் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே கரூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com