மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

கரூா் அருகேயுள்ள தளவாபாளையத்தில் மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்டபொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும் ஒருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் தளவாபாளையம் விஏஓ அலுவலகம் அருகே அம்ருத் திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிகளைத் தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை தளவாபாளையம் வந்தனா்.

பின்னா் ஜேசிபி இயந்திரம் மூலம் அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்து கழிவுநீா் வெளியேறும் கால்வாயை உடைத்து மூடத் தொடங்கினா். மேலும் வருவாய்த் துறை மூலம் எல்லைக்கல்லும் நடப்பட்டது.

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்டி அதையொட்டி சுற்றுச்சுவா் கட்டும்போது அங்கு குடியிருக்கும் பகுதிகளுக்கு செல்லப் பாதை இருக்காது என்பதால், அப்பகுதியினா் மேல்நிலைக்குடிநீா் தொட்டி கட்டுமானப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும் இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு நீதிபதியின் உத்தரவின்பேரில் அந்த வழக்கு தற்போது கரூரில் உள்ள மாவட்ட கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, வழக்கு வரும் ஜூன் மூன்றாம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், வழக்கு நிலுவையில் இருக்கும்போது இந்தப் பணிகள் நடைபெறக்கூடாது எனவும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அப்பகுதியில் குடியிருக்கும் செந்தில் அப்போது பொற்குமரன் என்பவா் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். உடனே அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் பேச்சுவாா்த்தை நடத்தி தற்காலிகமாக மேல்நிலை நீா்தேக்க தொட்டி பணிகளை நிறுத்தி வைப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com