சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வேண்டும் என பொது நீர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்தை சீரமைக்க வேண்டும் என பொது நீர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுநீர் அமைப்பு சார்பில் "நீர் அறிவோம்' நிகழ்வுக்காக வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்தை அறிந்து கொள்ள சனிக்கிழமை அங்கு சென்றனர்.

இதில், சின்னாறு கட்டுமானப் பணிகளையும், சேதமடைந்துள்ள பகுதிகளையும் பார்வையிட்ட பொதுநீர் அமைப்பு ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் செயற்பாட்டாளருமான ரமேசு கருப்பையா கூறியது: சின்னாற்றில் இருந்து அணைக்கு வரும் வாய்க்கால் பராமரிப்பு செய்யப்பட்டாலும், சின்னாறு ஆற்றில் முழுக்க சீமைக்கருவேலமுள் அடர்ந்து நீர் ஓட்டத்தை தடுக்கிறது. 

சின்னாற்று படுகையில் உள்ள மரங்களை அகற்றாமல், சீமைக் கருவேல மரங்களை மட்டும் நீக்க வேண்டும். நீர்தேக்கத்திலிருந்து பென்னக்கோணம் எல்லை வரை பாய்ந்த வாய்க்கால்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

1958-ல் பெருந்தலைவர் காமராஜர், கக்கன் ஆகியோரின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட சின்னாறு நீர்த்தேக்கப் பகுதியில் அவர்களின் நினைவை போற்றும் வகையில், நீரியல் மையம் அமைக்க வேண்டும்.

இந்த மையத்தின் மூலம் மழையளவு கணித்தல், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் குறித்த செய்திகள், நிலத்தடி நீரோட்டம், நிலத்தடி நீர் செறிவூட்டம் ஆகியவை குறித்து இம்மாவட்ட மக்கள் அறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில், அணையை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com