சர்வதேச ஓசோன் விழிப்புணர்வுப் பேரணி

பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் சார்பில், சர்வதேச ஓசோன் தினவிழிப்புணர்வு

பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் சார்பில், சர்வதேச ஓசோன் தினவிழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியர் த. கஜபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, குரும்பலுர் பிரதான சாலை, சிவன் கோயில் சாலை, நேதாஜி சாலை, காமராஜர் தெரு உள்ளிட்ட சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இப் பேரணியில் பங்கேற்ற 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, ஓசோன் படலம் பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து முழக்கமிட்டபடி சென்றனர். தொடர்ந்து, ஓசோன் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், இந்தோ அறக்கட்டளை நிர்வாகி ரெ. செல்வக்குமார், மருத்துவர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் ஒசோன் படலம் பாதிப்பு, அவற்றை காப்பதற்குண்டான வழிமுறைகளையும் மாணவர்களுக்கு விளக்கிப் பேசினர்.நிகழ்ச்சிகளில், உதவி தலைமை ஆசிரியர்கள் அ. ரமேஷ், சு. பாலகிருஷ்ணன், இளையோர் செஞ்சிலுவை சங்க இணை கன்வீனர் மு. ஜோதிவேல், உடற்கல்வி ஆசிரியர்கள் பா.த. ஸ்டான்லி, வ. தனபால், கவிதா, பிச்சைமணி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமை படை ஆசிரியர் ப. செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com