வாக்காளர் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க அழைப்பு

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சரிபார்க்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி  நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்- 2019 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, வாக்காளர்கள் 31.1.2019 அன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதற்கான சிறப்பு முகாம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பிப். 23, 24-களில் நடைபெற உள்ளது.  இந்த முகாமில் 1.1.2019 -இல் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிய அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான படிவங்களை அளித்து திருத்தம் மேற்கொள்ளலாம். வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். 18 வயது நிறைவடைந்து, வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்திடாத நபர்கள் ‌w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n  எனும் இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com