பெரம்பலூர், அரியலூரில் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈ. ராஜேந்திரன், பி. தயாளன், பெ. ராஜ்குமார், ச. அருள்ஜோதி, மு. கவியசரன், ஆ. ராமர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி. மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கினார்.
இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாத அநீதியைக் களைய வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ஊதிய முரண்களை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசாணை எண்- 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒய்.ஆர். செல்வராஜ், மு. பாரதிவளவன், பொ. வெங்கடேசன், ராமராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்டச் செயலர் எஸ். இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ப. குமரி அனந்தன் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரியலூரில்... 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் கண்ணதாசன், தமிழக ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் வேல்மணி ஆகியோர் தலைமை வகித்தனர். 
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் நம்பிராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் முருகேசன்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் அருமைக்கண்ணு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com