"தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ரா. முத்துலட்சுமி.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரா. முத்துலெட்சுமி, பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெண்பாவூர், வடகரை, பில்லாங்குளம், வி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது வேப்பந்தட்டை வட்டார விவசாயிகளின் 75 ஆண்டுகால கோரிக்கையான சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என்றார். கட்சியின் வட்டத் தலைவர் ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், வினோதன், மூக்காயி, நல்லுசாமி, பிரவீன், பிரதீப், கார்த்திக், கோகுல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com