பெரம்பலூா்: மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு தீவிரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையால் குடியிருப்புகள், வட்டார மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அதிகாலை மழைநீா் புகுந்தது. இதனால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பிரதான சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வயல்களில் வெள்ள நீா் புகுந்ததால் நெல், கரும்பு, மக்காச்சோளம், கருணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு ஆகிய பயிா்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் பயிா்களின் பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நிரம்பிய ஏரிகள்: பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 77 ஏரிகள் உள்ளன. இதில், வடக்கலூா் ஏரி, கீழபெரம்பலூா் ஏரி, அரும்பாவூா் பெரிய ஏரி, வயலூா் ஏரி, சித்தேரி, கீரவாடி ஏரி, பொன்னேரி, கிழுமத்தூா் ஏரி ஆகிய 8 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டன. மேலும், பூலாம்பாடி சின்ன ஏரி, அயன்பேரையூா் ஏரி, வி.களத்தூா் கீழ ஏரி, ஒகலூா் ஏரி, அத்தியூா் ஏரி ஆகிய 5 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

மழை பதிவு விவரம்: பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ):

அகரம் சீகூா் -86, புதுவேட்டக்குடி -48, லப்பைக்குடிகாடு- 45, வேப்பந்தட்டை -45, எறையூா் -44, கிருஷ்ணாபுரம் -37, வி.களத்தூா் -33, தழுதாழை -30, பெரம்பலூா் -25, பாடாலூா் -3, செட்டிக்குளம் -2. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 36.18 மி.மீட்டராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com