குறைதீர் கூட்ட மனுக்களுக்குபதில் அளிக்க வலியுறுத்தல்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட மனு தாரருக்கு பதில் அளிக்க  வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ஆர். ராஜாசிதம்பரம் அளித்த மனு: 
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், நுகர்வோர் மற்றும் விவசாயிகள் சார்பில் அளிக்கப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு தாரருக்கு பதில் அளிப்பதில்லை. இதனால் நுகர்வோர் குழப்பமடைய நேரிடுகிறது. இந்நிலையை தவிர்க்கும் விதமாக, நுகர்வோர் கொடுக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மின் நுகர்வோருக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய மின் இணைப்புக் கேட்டு பதிவு செய்து காத்திருக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. 
அது குறித்த உண்மை விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டும்.  1.4.2000 ஆண்டிலிருந்து மின் இணைப்புக் கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலக்கீடு ஒதுக்காமல் ஏமாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com