தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.  

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.  
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அளவிலான மேற்பார்வையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் அருகே சிறுவாசூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க பின்னடைவை சந்தித்ததையொட்டி கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 4 நாள்களிலேயே விலக்களிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. காலதாமதமாக தெரிவிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் தொடர்பாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வைத்துள்ளோம். 
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், அக்கட்சியின் தலைவரான ராகுல். காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் அவர் தலைமை மீது நம்பிக்கையிழந்து, அக்கட்சியினர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். இதில், பாஜகவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. 
பொருளாதாரத்தில் நலிவுற்ற, முன்னேறிய சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக சிலர் தவறான கருத்தைப் பரப்புகின்றனர். இந்த நடைமுறை ஒடுக்கப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு சலுகையைப் பறிக்காது. பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களும் பலனடைய வேண்டும் என்பதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். அத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி, தனது கணவர், மகன் ஆகியோரது வருவாய், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதுகுறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். 2 ஜி வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் முடிவில் தூத்துக்குடிதொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com