பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் பதிவு செய்ய ஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியை தங்கள் பள்ளிகளிலேயே இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.  


எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதியை தங்கள் பள்ளிகளிலேயே இணைய தளத்தின் வாயிலாக பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.  
2019 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை 10) வழங்கப்படுகிறது. 
புதன்கிழமை முதல் 24 ஆம் தேதி வரை ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி, அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின்   இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.  மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகி தங்கள் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com