பெரம்பலூரில்  ரூ. 51.39 லட்சம் மதிப்பில் உரம் தயாரிப்பு மையம் திறப்பு

பெரம்பலூர் நகராட்சியில் ரூ. 51.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, குப்பைகளிலிருந்து நுண்ணுயிர்

பெரம்பலூர் நகராட்சியில் ரூ. 51.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, குப்பைகளிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் முன்னிலையில், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 18 மெட்ரிக் டன் அளவில் குப்பைகள் சேகரமாகிறது. இக்குப்பைகள் மூலமாக  நகராட்சிக்குள்பட்ட இடங்களில் சுகாதார சீர்கேடு அடைகிறது. இச்சுகாதார சீர்கேட்டை குறைக்கும் வகையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 3 மெட்ரிக் டன் அளவுள்ள மக்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குப்பைகளை நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறு சிறு துண்டுகளாக்கி, அங்கு அமைக்கப்பட்டுள்ள 14 தொட்டிகளில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகள் அனைத்தும் 42 நாள்களுக்குள் நுண்ணுயிர் உரமாக மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com