ஆணவக் கொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 10:00 AM | Last Updated : 30th July 2019 10:00 AM | அ+அ அ- |

ஆணவக் கொலையைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக் கட்சியின் மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதிச் செயலர் அ.க. தமிழாதன், துணைச் செயலர் ச. மன்னர்மன்னன், மாவட்டப் பொருளாளர் அ. கலையரசன், வழக்குரைஞர்கள் இரா. ஸ்டாலின், ம.க.ச. ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலர் இளமாறன், மாநிலச் செயலர் வீர. செங்கோலன், மண்டலச் செயலர் இரா. கிட்டு, மாநில துணைச் செயலர் க.அ. தமிழ்க்குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, சாதி வெறி ஆணவப் படுகொலையைத் தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்றக்கோரி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தொகுதிச் செயலர் வெ. செல்வமணி, ஒன்றிய செயலர்கள் மனோகரன், இடிமுழக்கம், இளமாறன், வெற்றியழகன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஒன்றியச் செயலர் பாஸ்கர் வரவேற்றார். நகரச் செயலாளர் தங்க சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.