தர வரிசைப் பட்டியலில்  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. 
அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் 2018 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி வீதம், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரியத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாவட்ட அளவில் முதலிடமும், மண்டல அளவில் நான்காமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. 
பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி வீதத்தில் சிறப்பிடம் பெற பாடுபட்ட முதல்வர் ச. பத்மலால், துறைத் தலைவர்கள் மு. சரவணன், பா. சரவணன், இ. சர்மிளா, முத்துக்குமார், நா. அருண்குமார் ஆகியோரை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம், செயலர் எம்.எஸ். விவேகானந்தன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.  நிகழ்ச்சியில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com