நாளை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் கிராமத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெற உள்ளது. 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் நல அலுவலர் ஜெ.ஏ. முகம்மது யூசுப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம், அமைப்பு சாரா மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் அதிகப்படியான தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களின் செயல்பாடுகளைத் தொழிலாளர்கள் அறியும் வகையில் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி அலுவலகத்தில்  வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.   உறுப்பினராக சேர விரும்பும் கட்டுமான அமைப்புசாரா மற்றும் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை , பள்ளி மாற்றுச்சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, வயது சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் முகாமில் பங்கேற்கலாம்.   
அரியலூரில்....: அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை (ஜூன் 27)  அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வீரசோழபுரம் சுற்றுப்புறத்திலுள்ள அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களிடமிருந்து பதிவு விண்ணப்பங்கள், புதுப்பித்தல் விண்ணப்பங்கள் மற்றும் நல உதவி கேட்பு மனுக்கள் முகாமில் பெற்றுக் கொள்ளப்படும். கடைகள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தெரு சுமை வியாபாரிகள், தையல் கலைஞர்கள், நெசவுத் தொழில், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் உட்பட 60 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், கட்டுமானம் சம்பந்தப்பட்ட கொத்தனார், சித்தாள், கம்பி கட்டுநர், பிளம்பர், பெயிண்டர் உட்பட 38 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களும் உறுப்பினர்களாக சேரலாம். வீட்டுப் பணியாளர்களும் தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, 3 புகைப்படங்கள், வி.ஏ.ஓ கையொப்பம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் மேற்படி முகாமில் நேரில் ஆஜராகி உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com