உறங்கும் நிலையில் சூசையப்பர் உருவச் சொரூபம் திறப்பு

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் உறங்கும் நிலையில் உள்ள சூசையப்பர் உருவச்

பெரம்பலூர் அருகேயுள்ள பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் உறங்கும் நிலையில் உள்ள சூசையப்பர் உருவச் சொரூபம் நிறுவும் விழா கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் கும்பகோணம் மறைமாவட்டத்திலேயே மிகவும் பழமையா 158 ஆண்டுகள் புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பெயரை தற்போது புனித யோசேப்பு தேவாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யும் விழா, தேவாலயத்துக்குள் உறங்கும் நிலையில் உள்ள புனித சூசையப்பர் உருவச் சொரூபம் நிறுவும் விழா நடைபெற்றது.  
பெரம்பலூர் வட்டார முதன்மை பங்குகுரு ராஜமாணிக்கம், கோனான்குப்பம் வட்டார முதன்மை பங்கு குரு அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை வகித்து, உறங்கும் நிலையிலுள்ள புனித சூசையப்பர் உருவச் சொரூபத்தை பூஜை செய்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பிஷப் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com