தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடு: பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான வே. சாந்தா திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், பெரம்பலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.  
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர், தமிழக சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படைக் காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர் என 306 நபர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகள் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. 
பெரம்பலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், குளித்தலை  தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், லால்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும், முசிறி தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், துறையூர் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்றார் அவர்.
இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் அலுவலர் என். விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியர் மனோகரன், வட்டாட்சியர் சித்ரா, வேட்பாளர்களின் முகவர்கள் தேவராஜன், அன்புதுரை ஆகியோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com