நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் கட்டும் பணிகள் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சி சார்பில் ரூ. 51.39 லட்சம் மதிப்பீட்டில், மட்கும் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும்

பெரம்பலூர் நகராட்சி சார்பில் ரூ. 51.39 லட்சம் மதிப்பீட்டில், மட்கும் குப்பையிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம் அமைக்க நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
       பெரம்பலூர் நகராட்சியில் நாள் ஒன்றுக்கு 18 மெட்ரிக் டன் அளவில் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இக்குப்பைகள் மூலமாக பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை களையும் வகையில் பெரம்பலூர் நகராட்சி சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் ஆத்தூர் சாலையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.  
இங்கு தலா 3 மெட்ரிக் டன் அளவிலான மட்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, நறுக்கும் இயந்திரத்தின் மூலம் சிறு சிறு துண்டுகளாக 14 தொட்டிகளில் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகள் அனைத்தும் 42 நாள்களுக்குள் நுண்ணுயிர் உரமாக மாற்றப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உரங்களாக மாற்றி வழங்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்திய அவர், நில அளவைத் துறை சார்பில் நவீன நகர நில அளவை திட்டத்தின் மூலம் செயற்கைகோள் உதவியுடன் துல்லியமாக நிலத்தை அளவிடும் பணிகளை பார்வையிட்டு, நிலங்களை அளவிடும் முறைகள், நில உரிமையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கேட்டறிந்தார் ஆட்சியர் சாந்தா.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் (பொ) ராதா, நில அளவை உதவி இயக்குநர் ராஜேந்திரன், நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரசாத், நில அளவைத்துறை ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com