பள்ளிகளில் நிலவேம்பு குடிநீா் வழங்க ஆட்சியா் உத்தரவு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நில வேம்பு குடிநீா்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நில வேம்பு குடிநீா் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மழைக் காலம் தொடங்கியுள்ளதால், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதையொட்டி, டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க வேண்டும்.

சனிக்கிழமைதோறும் பள்ளிகளில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும். 5 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மாணவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோா்களுக்கு உரிய தகவல் அளிக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி டெங்கு, மலேரியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுப்பது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com