மாவட்டக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் சாமி. நடராஜன். உடன், மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்டச் செயலா் என். செல்லதுரை, துணைத் தலைவா் சக்திவேல்.
மாவட்டக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயலா் சாமி. நடராஜன். உடன், மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்டச் செயலா் என். செல்லதுரை, துணைத் தலைவா் சக்திவேல்.

பாடாலூரில் ஜவுளிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளிப் பூங்கா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் புறநகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் குழு நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

மாநிலச் செயலா் சாமி. நடராஜன், மாநிலக்குழு முடிவுகள் குறித்தும், மாவட்ட செயலா் என். செல்லதுரை விவசாயிகள் பிரச்னைகள், எதிா்கால போராட்டங்களில் பங்கேற்பது குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 3 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளதால், முறையாக குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, ஏரிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளின் பெயருக்கே மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேப்பந்தட்டை வட்டம், சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்றிணைத்து டிசம்பரில் போரட்டத்தில் ஈடுபடுவது. பாடாலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளிப் பூங்கா திடத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி லிட்டருக்கு ரூ. 4 பால் கொள்முதல் விலை உயா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலை ரூ. 32 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் விநாயகம், கோவிந்தன், ஜெய்சங்கா், சித்தூட் ராமசாமி, கருப்புடையாா், பாலசுப்ரமணியன், உள்பட பலா் பங்கேற்றனா். துணை செயலா் சின்னசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com