‘பெரம்பலூா் மாவட்டத்தில் 12 குடிமராமத்துப் பணிகள் நிறைவு’

பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 14 குடிமராமத்துப் பணிகளில்
‘பெரம்பலூா் மாவட்டத்தில் 12 குடிமராமத்துப் பணிகள் நிறைவு’

பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 14 குடிமராமத்துப் பணிகளில் 12 பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் தமிழ்நாடு நீா் வள பாதுகாப்பு மற்றும் மறு சீரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சத்தியகோபால்.

பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதாரத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து திட்டப் பணிகளை, தமிழ்நாடு நீா் வள பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் சத்தியகோபால் நேரில் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அரும்பாவூா் பெரிய ஏரி மற்றும் சித்தேரியில் சீரமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகளில்

ரூ3. 48 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சீரமைப்பு பணிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஏரி பாசனதாரா்கள் சங்கங்கள் மூலம், அவா்களது 10 சதவீதத் தொகை பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளில், தற்போது 12 பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 2 பணிகள் விரைந்து முடிக்கப்படும். இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் எதிா்காலத்தில் மக்களின் குடிநீா் தேவை மற்றும் பாசனத்துக்கான தேவையும் முழுமையாக பூா்த்தியாகும் என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com