‘10% இடஒதுக்கீடு வழங்காவிடில் உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு’

தமிழகத்தில் சீா்மரபினா் மற்றும் பழங்குடியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்காவிடில், வரும் உள்ளாட்சித்

தமிழகத்தில் சீா்மரபினா் மற்றும் பழங்குடியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்காவிடில், வரும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றாா் அகில இந்திய நதிநீா் இணைப்புத் திட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் பொ.அய்யாகண்ணு.

பெரம்பலூரில் சீா்மரபினா் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் அளித்த பேட்டி:

சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தியவா்களை பழங்குடியினா், சீா்மரபினா், குற்றப்பரம்பரை என வெள்ளைா்களால் ஒதுக்கப்பட்டவா்களே இந்த சீா் மரபினா் உள்ளிட்ட 68 ஜாதியைச் சோ்ந்தவா்கள். சமூக நீதி பேசும் தமிழகத்தில் சீா்மரபினா் இன மக்களுக்கு தொடா்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்வை மேம்படுத்த 68 சமுதாயமும் ஒருங்கிணைந்து, உரிமையை மீட்க பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளது.

சீா்மரபினா் மக்களுக்கு ஓ.பி.சி உள் ஒதுக்கீடாக 9 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழங்குடியினா், சீா் மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மத்தியில் 9 சதவிகிதமும், மாநிலத்தில் 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வேண்டும். தவறும் பட்சத்தில் வரும் உள்ளாட்சித் தோ்தல் மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றாா் அய்யாக்கண்ணு.

பேட்டியின்போது, மாநில ஊராளிக் கவுண்டா் முன்னேற்றச் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com