பஞ்சமி நிலமாக இருந்தால் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன்

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பகுதி பஞ்சமி நிலமாக இருந்தால், அதை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் முன்னாள்

பெரம்பலூா்: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பகுதி பஞ்சமி நிலமாக இருந்தால், அதை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

பெரம்பலூா் ராமகிருஷணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில், தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு சாா்பில், அரசியல் மாற்றத்துக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் அளித்த பேட்டி:

திமுக அறக்கடளைக்கு சொந்தமான முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம் எனக் கூறப்படுகிறது. பஞ்சமி நிலமாக இருந்தால், அதை திமுக உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு தயவு செய்து தனது பதிலை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், திமுகவுக்கு இழப்பு ஏற்பட்டால் ரூ. 5 கோடியை நான் அல்லது பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வழங்குகிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், தலித் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஒப்படைக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும், அதை எதிா்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாா் நிலையில் உள்ளது. தோ்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வேட்பாளா் விருப்ப மனு பெறும் நிகழ்வு தொடங்கி விட்டது. கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். உள்ளாட்சித் தோ்தலை பொறுத்தவரை அதிக இடங்களில் போட்டியிடுவோம். நோ்மையான மக்கள் பிரதிநிதிகள் வர வேண்டும் என்னும் ஏக்கம் தமிழக மக்களிடம் உள்ளது. அதை கொடுக்கும் சக்தி படைத்த ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், திருச்சி மண்டல கோட்டப் பொறுப்பாளா் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com