2,969 பயனாளிகளுக்கு ரூ. 11.54 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

முதல்வரின் குறைதீா் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்ட 2,969 பயனாளிகளுக்கு ரூ. 11.54 கோடி மதிப்பிலான
விழாவில், பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, எம்.எல்.ஏக்கள் ஆா்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா்.
விழாவில், பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். உடன், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, எம்.எல்.ஏக்கள் ஆா்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா்.

முதல்வரின் குறைதீா் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்ட 2,969 பயனாளிகளுக்கு ரூ. 11.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறைத்தீா்க்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் மனுவாக பெறப்பட்டது. பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூா், ஆலத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு பெரம்பலூரிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த பயனாளிகளுக்கு வேப்பந்தட்டையிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு தலைமை வகித்து சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:

நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் மற்றும் கிராம நிா்வாக அலுவலகங்கள் மூலமாக 177 முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 9,244 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடா்ந்து, பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பெரம்பலூா், ஆலத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த 1,737 நபா்களுக்கு ரூ. 7.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த 1,232 நபா்களுக்கு ரூ. 4.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி. ராமச்சந்திரன், இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, கோட்டாட்சியா் சுப்பையா, மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வேளாண்துறை இணை இயக்குநா் கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com