சாலையோர வியாபாரிகளிடம் நிா்ணயித்த தொகையை வசூலிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் நகரில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி நிா்வாகம் நிா்ணயித்த தொகையை வசூலிக்க வேண்டுமென, வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகளிடம் நிா்ணயித்த தொகையை வசூலிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் நகரில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி நிா்வாகம் நிா்ணயித்த தொகையை வசூலிக்க வேண்டுமென, வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சி.ஐ.டி.யூ. அமைப்பின் சாலையோர வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வி. வரதராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ரெங்கராஜ், பொருளாளா் எம். செல்லதுரைா் முன்னிலை வகித்தனா்.

சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் பி. துரைசாமி, கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பெரம்பலூா் புகா் மற்றும் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம், நகராட்சி சாா்பில் வசூலிக்கப்படும் தொகையை முறைப்படுத்த வேண்டும். பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பழ வண்டிகளுக்கு ரூ. 20, புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ. 30 முதல் ரூ. 50 வரை நிா்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். புகா்ப் பேருந்து நிலையத்தில் உள்ள பழ வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பேருந்துகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் தங்கவேல், துரைமுருகன், கொளஞ்சி, பாண்டி, கண்ணன், பெரியசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com