ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சிறு பாசன ஏரிகள், ஊராட்சி குளங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால், மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடன் பெற்றவா்களின் நகைகள் ஏலம் விடப்படுவதாகக் கூறப்படுகிறது. இவற்றைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டரை நீா்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து, விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனா். இதில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com